விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும் – எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்

Webdunia
புதன், 21 அக்டோபர் 2020 (15:48 IST)
நடிகர் ராதாரவி அதிமுகவில் இருந்து பாஜவில் இணைந்தார். அதன்பின்னர் நடிகை குஷ்பூ காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மேலும் சில பிரபலங்களும் பாஜகவில் இணைய போவதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில் திடீரென விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் பாஜகவில் இணைய உள்ளதாக சமூக வலைதளங்களில் ஏற்கனவே வதந்திகள் வெளியானது. 

இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் எஸ்.ஏ.சந்திரசேகரே இதுகுறித்து விளக்கம் அளித்தார்.  அதில் “நான் பாஜகவில் இணைவது குறித்து யோசித்ததே இல்லை. நான் பாஜகவில் இணைய போவதாக எதற்காக சமூக வலைதளங்களில் தகவல் பரப்பி வருகிறார்கள் என்றும் தெரியவில்லை” என குழப்பத்துடன் கூறினார்.

இந்நிலையில், பாஜவில் இணையப் போகிறீர்களா என்ற வதந்திக்கு நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ சந்திரசேகர் இன்று பேட்டியளித்துள்ளார்.

அதில், நான் பாஜகவில் இணையப் போகிறேனா இல்லையா என்ற கேள்விக்கே இடமில்லை; ஏனென்றால் எனக்கு ஒரு தனி அமைப்பு உள்ளது என்று தெரிவித்தார்.

மேலும்  விஜய் மக்கள் இயக்கம் என்பது தேவைப்படும்போது அரசியல் கட்சியாக மாறும். மக்கள் அழைக்கும்போது சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்ரு அவர் தெரிவித்துள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்