தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் நூலகம் திறந்து வைக்கப்படும் என சமீபத்தில் தகவல் வெளியான நிலையில் நாளை முதல் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் நூலகங்கள் திறந்து வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல் கட்டமாக தமிழ்நாடு முழுவதும் 11 இடங்களில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் தளபதி விஜய் நூலகம் திறந்து வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையில் தாம்பரம் மற்றும் பல்லாவரம் பகுதியில் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தளபதி விஜய் நூலகத்தை திறந்து வைக்கிறார்.