சூர்யாவுக்கு ஜோடியாகும் விஜய் பட ஹீரோயின்

Webdunia
சனி, 2 ஜூலை 2022 (17:42 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சூர்யாவின் புதிய படத்தில் முன்னணி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்  சூர்யா. இவர் தற்போது பாலவின் இயக்கத்தில் சூர்யா41 படத்தில்  நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்து, சிவாவின் படத்தில் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த   நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடித்து வந்த வாடிவாசல் பட ஷூட்டிங் தள்ளிப்போயுள்ள நிலையில், இந்த வருடத்திற்குள் சிவா- சூர்யா இணையும் படத்தின் ஷூட்டிங் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்த நடிகை பூஜா  ஹெக்டே  சிறுத்தை சிவா நடிக்கவுள்ள படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும், அடுத்தாண்டு  ஜனவரி மாதம் இளம் இயக்குனர் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் அவர் விஞ்ஞானியாக நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்