தனது குழந்தை பற்றி உருக்கமான பதிவிட்ட விஜய் பட நடிகை

Webdunia
திங்கள், 9 மே 2022 (18:37 IST)
பாலிவுட்டில் முன்னணி  நடிகை பிரியங்கா சோப்ரா தனது குழந்தை பற்றி ஒரு உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

நடிகர் விஜய்  நடிப்பில் உருவான தமிழன் என்ற படத்தில் அறிமுகம் ஆனவர் பிரியங்கா சோப்ரா. அதன் பின்னர், பாலிவுட்டில் முன்னனி நடிகையாக வலம் வந்த அவர் கடந்த 2018 ஆம் ஆண்டு பாப் பாடகர்  நிக் ஜூனாசை திருமணம் செய்துகொண்டார். இருவரும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்தனர்.

இ ந் நிலையில் நேற்று அன்னையர் தினத்தை முன்னிட்டு, தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை அவர் பதிவிட்டிருந்தார். அதில், கடந்த 100 நாட்களுக்கு மேல் எங்கள் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நிலையில் எங்கள் வீட்டிற்கு வந்துள்ளதால்  நாங்கள் மகிழ்ச்சிறோம்.

எங்கள் குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எங்கள்  நன்றியை கூறுகிறோம். எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்