133 ஆண்டுகள் பள்ளியைத் தத்தெடுத்த விஜய் பட நடிகர்

திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (22:57 IST)
கடந்த வருடம் சீனாவில் இருந்து முதன் முதலில் கொரொனா தொற்று உருவானது. அதிக உயிரிழப்புகளையும் பாதிப்பையும் ஏற்படுத்திய நிலையில், கொரொனா இரண்டாம் அலைப்பரவல்  அதிகரித்து வருகிறது. விரைவில் மூன்றாவது அலை பரவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது  ஊரடங்கில் சில தளர்வுகல் அறிவிக்கப்பட்டு அனைத்துத் தொழில்துறைகளும் கொரோனா வழிமுறைகளைப்பின்பற்றி செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு முதல் கொரொனா ஊரடங்கு காலத்தில் பாதிப்பட்டு வாழ்வாதாரம் இழந்துள்ள மக்களுக்குத் தொடர்ந்து சினிமாத்துறையினர், அரசியல்வாதிகள்,  சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து உதவி செய்து வருகின்றனர்.

எனவே, பிரபல நடிகர்  கிச்சா  சுதீப் கர்நாடக மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரில் சுமார் 133 ஆண்டுகள் பழமையான அரசுப் பள்ளியைத் தத்தெடுத்துள்ளார்.   இதன் மூலம் இப்பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துகொடுக்க அவர் முடித்துள்ளார். நடிகர் சுதீப் செயலுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.                                                    

இவர் நடிகர் விஜய் நடித்த புலி படத்தில் அவருக்கு வில்லனாக நடித்தது குறிப்பிடத்தக்கது.         

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்