விஜய் மக்கள் இயக்கத்தில் துணை செயலாளராக இருந்தவர் குமார். இவர் 2 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் வகித்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் இன்று சென்னையில் உள்ள விஜய்யின் வீட்டின் முன்னர் குடும்பத்தோடு வந்து நின்றுள்ளார். ஆனால் அவரை விஜய் சந்திக்க முடியாது எனக் கூறியும் அவர் அங்கிருந்து செல்லாததால் காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டு அவர்கள் அங்கிருந்து அவரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது சம்பள பாக்கியை வாங்க வந்ததாக அவர் கூறியுள்ளார்.