13 வருடங்களுக்கு பின் 'கில்லி 2': விஜய்-தரணி கூட்டணி தயாரா?

Webdunia
வியாழன், 20 ஏப்ரல் 2017 (22:02 IST)
இளையதளபதி விஜய்யின் வெற்றி படங்களில் மிக முக்கியமான படம் 'கில்லி'. தமிழகத்தின் முக்கிய நகரங்களில் 200 நாட்கள் ஓடி வசூலை அள்ளிக் குவித்த இந்த படம் வெளியாகி 13 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த பேச்சு அடிபடுகிறது.



 


'கில்லி 2' படத்தின் திரைக்கதை தயாராக இருப்பதாகவும், இந்த திரைக்கதை 'கில்லி' முதல் பாகத்தை விட படு ஸ்பீடாக இருக்கும் என்றும், விஜய் எப்போது ஓகே சொன்னாலும் உடனே இந்த படத்தை இயக்க தான் தயாராக இருப்பதாகவும் இயக்குனர் தரணி சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இதனையடுத்து 'கில்லி 2' என டுவிட்டரில் ஃஹேஷ்டேக் உருவாக்கி விஜய் ரசிகர்கள் அதை இந்திய அளவில் டிரெண்டுக்கு கொண்டு வந்துள்ளனர். 'விஜய் 61' மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் படம் முடிந்ததும் விஜய் 'கில்லி 2' படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்