20 வருடங்களுக்குப் பிறகு ரிமிக்ஸ் செய்யப்படும் விஜய்யின் ஹிட்பாடல்… வாரிசு லேட்டஸ்ட் அப்டேட்!

வெள்ளி, 7 அக்டோபர் 2022 (15:24 IST)
விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் நடந்து வந்த நிலையில் தற்போது இயக்குனர் வம்சிக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டு பின்னர் இப்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படத்தைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி விஜய் நடித்து 2002 ஆம் ஆண்டு வெளியான யூத் படத்தில் இடம்பெற்றிருந்த ‘ஆல்தோட்ட பூபதி’ பாடலை வாரிசு படத்தில் ரிமிக்ஸ் செய்துள்ளார்களாம். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்