ஹாட்ரிக் கொடுத்த ஷாருக் கான் இன்னும் தன்னுடைய அடுத்த படத்தை அறிவிக்கவில்லை. அதனால் 2024 ஆம் ஆண்டு அவரின் எந்த படமும் ரிலீஸாகவில்லை. இந்நிலையில் அவர் கிங் என்ற படத்தில் நடிக்க உள்ளார்.. இந்த படத்தை சுஜாய் கோஷ் இயக்க உள்ளதாக சொல்லப்படும் நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் ஷாருக் கானின் மகள் சுஹானா கான் நடிக்க உள்ளார்.
இந்நிலையில் எஸ்கொயர் என்ற பத்திரிக்கை வெளியிட்டுள்ள உலகின் பணக்கார நடிகர்கள் பட்டியலில் ஷாருக் கான் 891 மில்லியன் டாலர் சொத்துகளோடு நான்காம் இடத்தைப் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் முதல் இடத்தில் அர்னால்ட்(1.49 பில்லியன் டாலர்), இரண்டாம் இடத்தில் தி ராக் (1.19 பில்லியன் டாலர்) மூன்றாம் இடத்தில் டாம் க்ரூஸ் (891 மில்லியன் டாலர்) ஆகியோர் உள்ளனர். இந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கும் ஒரே இந்திய நடிகர் ஷாருக் கான்தான் என்பது குறிப்பிடத்தக்கது.