இந்திய மக்கள் தொகையில் 2 சதவீதம் பேர்தான் தியேட்டருக்கு வருகிறார்கள்.. அமீர் கான் ஆதங்கம்!

vinoth

சனி, 3 மே 2025 (09:45 IST)
இந்தி சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அமீர்கான். வணிக ரீதியானப் படங்கள் மற்றும் கதையம்சம் உள்ள படங்கள் என இரண்டிலும் மாறி மாறி நடிக்கக் கூடிய ஒரு நடிகர். அதே நேரம் சினிமா வியாபாரத்தை எப்படியெல்லாம் பெருக்கலாம் என்பது குறித்தும் தொடர்ந்து பேசி வருபவர்.

சில மாதங்களுக்குப் படங்களை ஓடிடிக்குக் கொடுப்பதில் கால இடைவெளி இருக்க வேண்டும் அப்போதுதான் மக்கள் திரையரங்குகளுக்குப் படம் பார்க்க வருவார்கள் என்று பேசியிருந்தார். இந்நிலையில் இப்போது இந்திய மக்கள் தொகையில் 2 சதவீதம் பேர்தான் படம் பார்க்க வருகிறார்கள் என்று கூறியுள்ளார்.

இதுபற்றி பேசியுள்ள அமீர் “இந்தியாவில் தியேட்டர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.  ஓடிடி மற்றும் தியேட்டரில் திண்பண்டங்களின் விலையேற்றத்தாலும் மக்கள் திரையரங்குகளுக்கு வருவதில்லை. அமெரிக்காவில் நாற்பது ஆயிரம் திரையரங்குகளும், சீனாவில் தொன்னூறு ஆயிரம் திரையரங்குகளும் உள்ளன. ஆனால் இந்தியாவில் பத்தாயிரம் திரையரங்குகள்தான் உள்ளன. இந்தியாவில் 2 சதவீதம் மக்கள் கூட திரையரங்க்குக்கு வருவதில்லை” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்