அருண் விஜய் நடிப்பில் ஏ எல் விஜய் இயக்கும் புதிய படம்… வெளியான டைட்டில்!

வியாழன், 6 அக்டோபர் 2022 (09:14 IST)
இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

இயக்குனர் ஏ எல் விஜய் சமீபத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தலைவி என்ற படத்தை உருவாக்கினார். இந்த படம் சமீபத்தில் ரிலீஸானது. இதையடுத்து அவர் இயக்க உள்ள படத்தில் நடிகர் அருண் விஜய் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் இங்கிலாந்தில் நடந்த நிலையில் இப்போது படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அருண் விஜய், ஏமி ஜாக்சன் மற்றும் நிமிஷா சஜயன் நடிக்கும் இந்த படத்துக்கு ‘அச்சம் என்பது இல்லையே’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். இது சம்மந்தமான அறிவிப்பு கிளிம்ப்ஸ் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

Edited by Vinoth

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்