தெலுங்கு சினிமாவில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் கீத கோவிந்தம், டியர் காம்ரேட், சாலோ உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னனி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இப்படத்த அடுத்து, அல்லு அர்ஜூனுடன் இணைந்து புஸ்பா படத்தில் நடித்திருந்தார். இப்படம் சூப்பர் ஹிட் ஆகி வசூல் குவித்தது.
இதையடுத்து,இவர் தமிழ் சினிமாவில் கார்த்தி நடித்த சுல்தான் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். இப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த அவர், அடுத்து நடிகர் விஜய்யின் தெலுங்கு – தமிழில் உருவாகும் 'வாரிசு' என்ற படத்தில் நடித்து வருகிறார்.