ராஷ்மிகாவுக்கு மட்டும் எப்படி அதிகரிக்குது..? – வியந்து போன ஜான்வி கபூர்!

செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (16:07 IST)
பிரபல பாலிவுட் நடிகையான ஜான்வி கபூர், பாலிவுட் கான் நடிகர்கள் பற்றியும், ராஷ்மிகா மந்தனா பற்றியும் பேசியது வைரலாகியுள்ளது.

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக உள்ளவர் ஜான்வி கபூர். தயாரிப்பாளர் போனி கபூர் – நடிகை ஸ்ரீதேவியின் மகளான இவர் இந்தியில் பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் நடித்துள்ள “குட் லக் ஜெர்ரி” திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்த படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய ஜான்வி கபூர் “இந்தியில் சல்மான் கான், ஷாரூக்கான், அமீர் கான் போன்ற நடிகர்களோடு பலரும் நடிக்க விரும்புகிறார்கள். எனக்கும் அவர்களோடு நடிக்க ஆசை. ஆனால் ஜோடியாக அல்ல. அவர்கள் வயதின் காரணமாக அவர்களோடு நான் ஜோடியாக நடித்தால் பார்ப்பதற்கு வித்தியாசமாய் இருக்கும்” என கூறியுள்ளார்.

மேலும் “தென்னிந்திய மொழிகளில் குறிப்பாக தமிழ் மொழியில் நடிக்க வேண்டும் என விரும்புகிறேன். நடிகைகளில் ராஷ்மிகா மந்தனாவை பார்க்கும்போது எப்படி அவருக்கு மட்டும் இவ்வளவு வேகமாக இன்ஸ்டாவில் ஃபாலோவர்கள் அதிகரிக்கிறார்கள் என்று ஆச்சர்யமாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்