விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் தெலங்கானா என இரு இடங்களிலும் மாறி மாறி நடந்து வருகிறது. படம் சம்மந்தமாக எந்தவொரு புகைப்படமும் வெளியாவதை விரும்பாத படக்குழு பாதுகாப்போடு படப்பிடிப்பை நடத்தி வருகிறது. இந்நிலையில் முன்பு சென்னையில் படப்பிடிப்பு நடந்தபோது படப்பிடிப்பு தளத்தில் விஜய் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின. அதுபோல இப்போது மற்றுமொரு படப்பிடிப்புத் தள புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.