இலவச வீட்டை உடைத்த விஜய் ரசிகர் - தொடரும் அராஜகம்

திங்கள், 12 நவம்பர் 2018 (13:37 IST)
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடந்துள்ள சர்கார் படத்தில் தமிழக அரசின் இலவச திட்டங்களை உதாசீனப்படுத்தும் விதத்தில் சர்ச்சையான காட்சிகள் இடப்பெற்று ஆளும் கட்சியினரை கொதிப்படைய வைத்தது. 
 
கதை திருட்டு, சர்ச்சை காட்சிகள் என தொடர் பிரச்சனைகளை சந்தித்து வந்த சர்கார் வசூலில் அமோக சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. 
 
சர்கார் படத்தில் இலவச பொருட்களை உதாசினப்படுத்தும் சர்ச்சை காட்சியை விஜய் ரசிகர்கள்  பின்பற்றி வருகின்றனர். அந்தவகையில்  தங்கள் வீடுகளில் உள்ள  இலவச பொருட்களை உடைப்போம் என்று அவதாரம் எடுத்துள்ள அவர்கள், தங்கள் வீடுகளில் உள்ள மிக்ஸி, கிரைண்டர், பேஃன் உள்ளிட்ட எல்லா இலவசங்ளையும் நெருப்பில் தூக்கி போட்டு உடைத்து வந்தனர்.
 
இதன் மூலம் படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் அனைத்தும் விஜய் ரசிகர்கள் நிஜமாக்கி  ஆளும் கட்சியினரின் வெறுப்புக்குள்ளாகினர் . 
 
அந்த வகையில் தற்போது ஒரு படி மேலே சென்று ஏழை மக்களுக்காக அரசாங்கம் இலவசமாக கட்டிக்கொடித்த வீட்டை விஜய் ரசிகர் ஒருவர் உடைத்து வருகிறார்.
 
அந்த வீடியோ இணையத்தில் வெளிவந்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி  வைரலாகி வருகிறது.
 
இந்த காணொளியை பார்க்கும்பொழுது வீட்டை விரிவுபடுத்த இடித்ததை இப்படி மாற்றி வெளியிடுகிறார்களா என்றும் தோன்றுகிறது.
 
 எது எப்படி இருந்தால் என்ன, இதெல்லாம் "சர்கார்"படத்தின் விளைவுகள் தானே...
 
 

ஆஆஆஆ pic.twitter.com/2RnikeI16d

— ℳя.பிரின்ஸ்™ (@Billaprince1) November 12, 2018

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்