விஜய் தேவாரகொண்டாவின் லைகர் போஸ்டரில் மைக் டைசன்!

வியாழன், 4 நவம்பர் 2021 (14:03 IST)
விஜய் தேவாரகொண்டா நடிக்கும் லைகர் படத்தில் மைக் டைசன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் செய்தி வெளியானது.

தென்னிந்தியாவில் வளரும் நட்சத்திரமாக உயர்ந்து வருகிறார் விஜய் தேவாரகொண்டா. இப்போது அவர் நடிக்கும் படத்தை பூரி ஜகன்னாத் இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தின் போஸ்டரை இன்று இணையத்தில் வெளியிட்டுள்ளார் விஜய் தேவாரகொண்டா. இந்த படத்துக்கு லைகர் (லைன் +டைகர்) என்ற பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தை இந்தியின் முன்னணி இயக்குனர் கரண் ஜோஹரின் தர்மா புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் விஜய் பாக்ஸராக நடிக்கும் நிலையில் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் பிரபல குத்துச் சண்டை வீரரான மைக் டைசனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. மைக் டைசன் ஏற்கனவே சில ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று தீபாவளியை முன்னிட்டு லைகர் படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டரில் மைக் டைசன் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இது விஜய் தேவாரகொண்டா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்