விந்தணுவை தானம் செய்யுங்கள் - பிரபல ஹீரோவுக்கு கோரிக்கை வைத்த விஜே பாவனா!

Webdunia
புதன், 9 அக்டோபர் 2019 (12:12 IST)
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர், ஏர்டெல் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ஃபேமஸ் ஆனவர் விஜே பாவனா. இவர் முதன் முதலில் ராஜ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பீச் கேர்ள்ஸ் நிகழ்ச்சி மூலம் தனது கேரியரை துவங்கினாலும் விஜய் தொலைக்காட்சி தான் இவரை குறுகிய காலத்தில் பிரபலமாக்கியது. 


 
சிவகார்த்திகேயன் , மாகாபா ஆனந்த் போன்றவர்களுடன் இவர் தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சிகள் படு ஃபேமஸ் ஆனது. மேலும் பரதநாட்டியம், டப்பிங் ஆர்டிஸ்ட், சிங்கர் என பல கலைகளில் ஜொலித்து வரும் இவர் மும்பையை சேர்ந்த நிகில் ரமேஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்பும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கவனத்தை செலுத்தி வரும் இவர் ரித்திக் ரிஷான், டைகர் ஷெராஃப் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த "வார்" படத்தை பார்த்து ட்விட் செய்துள்ளார். 


 
அதில், #WarMovieReview என குறிப்பிட்டு பொதுவாக ஆண்களுக்கு விறுவிறுப்பான ஆக்ஷன் காட்சிகள்,  கார் சேசிங் மற்றும் ஹாலிவுட் போன்ற சண்டைக்காட்சிகளுக்காக படத்தை ரசிப்பார்கள். ஆனால், பெண்களுக்கு படம் பிடிக்க இரண்டு முக்கிய காரணம் உண்டு அது ஹ்ரித்திக் ரோஷன் மற்றும்  டைகர் ஷெராஃப் மட்டும் தான்.  ஹிருத்திக் உண்மையில் இன்னும் அதிக திரைப்படங்களில் நடிக்க வேண்டும். மேலும் அவர் விந்தணு தானம் கூட செய்யவேண்டும்.  கோ வாட்ச்..! #war என வித்தியாசமான முறையில் ரசித்து ட்விட் போட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்