விவேகத்தை பாராட்டிய மெர்சல்: இது தல தளபதி ரசிகர்களுக்கு!!

Webdunia
செவ்வாய், 1 ஆகஸ்ட் 2017 (15:27 IST)
தமிழ் சினிமாவில் அந்த காலத்தவர்களுக்கு எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினி - கமல் போன்று இந்த காலத்து இளைஞர்களுக்கு விஜய் - அஜித். 


 
 
இவற்களுக்கிடையே ஆன போட்டிக்கு என்றும் பஞ்சம் இல்லை. ஆனால், உண்மையில் அவர்கள் இருவரும் நல்ல நண்பர்களே. சில நேரங்களில் அவர்களது ரசிகர்கள்தான் போட்டி போட்டுகொள்கின்றனர். 
 
விவேகம் மற்றும் மெர்சல் என இரண்டு படங்களுக்கும் எடிட்டராக பணியாற்றுபவர் ரூபன். இவர் ஒரு சுவாரஸ்ய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 
அது என்னவெனில், விவேகம் படத்தின் டீசரை பார்த்த விஜய், டீசர் நன்றாகவுள்ளதாக பாராட்டியுள்ளார். அதே போல் அட்லீயும் காதலடா பாடலை கேட்ட பின் சிவாவிற்கு போன் செய்து பாராட்டியுள்ளார்.
 
அடுத்த கட்டுரையில்