நீட் தேர்வு மையத்தில் படித்த மாணவன் தற்கொலை: மன அழுத்தம் காரணமா?

வெள்ளி, 24 பிப்ரவரி 2023 (19:35 IST)
நீட் தேர்வு மையத்தில் படித்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து அவர் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 17 வயது மாணவர் அபிஷேக். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் பயிற்சி மையத்தில் படித்து வந்தார். இந்த நிலையில் விடுதியில் தங்கி படித்து வந்த அபிஷேக் திடீரென மின்விசிறிகள் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். 
 
அவர் எழுதிய கடிதத்தில் தான் மிகவும் மன உளைச்சலில் இருப்பதாகவும் படிப்பால் தனக்கு மன அழுத்தம் ஏற்பட்டதாகவும் பெற்றோர் தன்னை மன்னிக்கும்படியும் கூறியிருந்தார். 
 
இந்த தற்கொலை அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்