விஜய் திரிஷா ஒன்றாக இருக்கும் புகைப்படம் பற்றிய வதந்தி… முடிவுக்கு வந்த சர்ச்சை!

புதன், 16 ஆகஸ்ட் 2023 (09:32 IST)
குருவி திரைப்படத்துக்கு பிறகு 15 ஆண்டுகள் கழித்து விஜய்யும் திரிஷாவும் இப்போது லியோ படத்தில் இணைந்து நடித்துள்ளனர். ஹிட் படங்களைக் கொடுத்த இந்த கூட்டணியை மீண்டும் திரையில் காண, ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

இந்த  நிலையில்,   நடிகர் விஜய் நார்வே சென்றுள்ளதாகவும், நடிகை திரிஷாவும் அங்கு சென்றுள்ளதாகவும், இருவரும்  நார்வேயின் ஓஸ்லோவில்   ஷாப்பிங் சென்றதாகக் கூறி   புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் அந்த புகைப்படம் லியோ படத்தின் காட்சிகளில் ஒன்று தற்போது தகவல் வெளியாகி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தை பதிவிட்ட நபரிடம் லியோ தயாரிப்பு நிறுவனம் காப்பிரைட் உரிமம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்