இந்நிலையில் படத்தின் ஆடியோ ரிலீஸ் பற்றிய தகவல் ஒன்று இணையத்தில் பரவி, வைரல் ஆகி வருகிறது. படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா மலேசியாவில் நடக்க உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் அதில் இப்போது ஒரு சிக்கல் உருவாகியுள்ளது. மலேசியாவில் உள்ள ஒரு பிரம்மாண்ட அரங்கில் செப்டம்பர் 23 ஆம் தேதி ஆடியோ வெளியீட்டை நடத்தலாம் என படக்குழு திட்டமிட, ஆனால் அந்த தேதியில் அரங்கு வேறு நிகழ்ச்சிக்காக புக் செய்யப்பட்டுவிட்டதாம். அதனால் தேதியை மாற்றுவதா அல்லது இடத்தை மாற்றுவதா என்ற குழப்பத்தில் இருக்கிறதாம் படக்குழு.