புதிய படத்துக்காக 8 மணி நேரம் பயிற்சி எடுக்கும் விஜய் - செம வைரல் வீடியோ

செவ்வாய், 28 மே 2019 (19:47 IST)
நடிகர் விஜயகுமாரின் மகனாக  சினிமாவில் அறிமுகமானாலும்  கூட ஆரம்ப காலத்தில் வெளியான படங்கள் அவ்வளவாக போகாத நிலையில் ’தடயறதக்க’ என்ற படம் நடிகர் அருண் விஜய்க்கு கைகொடுத்தது. அதன் பின்னர் கதைகளை பார்த்து பார்த்து தேர்வு செய்து ஹிட் படங்களைக் கொடுத்துவருகிறார்.
இந்நிலையில் நடிகர் அருண்விஜய் புதிதாக நடிக்கவுள்ள பாக்ஸர் படத்துக்காக மிகவும் கட்டுக்கோப்பாக தனது உடலை மாற்றி கடினமாக உடற்பயிற்சிகள் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. இது தற்போது வைரலாகி வருகிறது.
 
இப்படத்தி இயக்குநர் விவேக் கூறியதாவது :
அருண் விஜய் ஒரு மாதகாலமாக கடும் பயிற்சியில் இருந்தார். பீட்டர் ஹெயின் மாஸ்டரின் பரிந்துரையின்படி வியட்நாமில் உள்ள லின் பாங்கில் தினமும் 8 மணி நேரம் பயிற்சி எடுத்துக்கொண்டார்.
 
மேலும்,பாக்ஸர் படத்தில் அருண்விஜய் குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார். இதில் ஒரு பிரபல குத்துச்சண்டை வீரனுக்குள் இருக்கும் தீய சக்தியை எதிர்த்து  போராடும் ஒரு வீரனின் கதையை அடிப்படையாகக்கொண்டது என்று தகவல்கள் வெளியாகிறது.

 

Here's a glimpse of my training at Vietnam for #BOXER for you all!!

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்