விஜய்யின் GOAT படத்துக்குப் பிறகு ஏஜிஎஸ் புரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பாக பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் டிராகன் படம் பிப்ரவரி 21 ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் ரிலீஸாகி கவனம் பெற்றுள்ளன. படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கடாயு லோஹர் மற்றும் மிஷ்கின் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.
படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 21 ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குனர் விக்னேஷ் சிவன் நடிகர் ப்ரதீப்புக்கு நன்றி தெரிவித்துள்ளார். அவர் பேசும்போது “ப்ரதீப்புக்கு நான் என் வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டுள்ளேன். என் வாழ்க்கையில் நான் மோசமானதொரு காலகட்டத்தில் இருந்தேன். அப்போது அவரை சந்தித்து ஒரு கதையை சொன்னேன். அவர் உடனே ஒத்துக்கொண்டு நடிக்க சம்மதம் சொன்னார். அப்படி உருவானதுதான் LIK படம்” எனக் கூறியுள்ளார்.