சிம்புவால்தான் நான் அதை செய்து கொண்டிருக்கிறேன்… விக்னேஷ் சிவன் பகிர்வு!

vinoth

வெள்ளி, 14 பிப்ரவரி 2025 (10:46 IST)
நடிகை நயன்தாராவின் காதல் கணவரான விக்னேஷ் சிவன் ‘நானும் ரௌடிதான்’ என்ற ஒரே ஒரு வெற்றிப்படத்தை மட்டும் கொடுத்திருந்தாலும் தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி இயக்குனராக வலம் வருகிறார்.  தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ப்ரதீப் ரங்கநாதன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.  இதில் எஸ் ஜே சூர்யா, சீமான் மற்றும் க்ரீத்தி ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றன. லலித்குமார் தயாரிக்கிறார்.

இதற்கிடையில் விக்னேஷ் சிவன் சில படங்களுக்குப் பாடல்களும் எழுதி வருகிறார். அர்த்த செறிவுள்ள பாடல்கள் இல்லை என்றாலும் அவர் எழுதும் பாடல்கள் ஹிட்டாவதால் தொடர்ந்து பலரும் அவரை பாடல்கள் எழுதவைக்கின்றனர்.

இந்நிலையில் ட்ராகன் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அவர் “போடா போடி படத்தில் நான் ஒரு பாடலை எழுதினேன். அப்போது சிம்புதான் என்னிடம் “ விக்கி நீ நல்லாதான் பாடல் எழுதுற. நீயே பாட்டு எழுதுன்னு ஊக்குவித்தார். ஆனால் எந்த பாடல் எழுதினாலும் வார்த்தைகளைக் கவனமாக போட்டுதான் எழுதுகிறேன்.என்னை அறிந்தால் படத்தில் எல்லாமே இனிமேல் நல்லாதான் நடக்கும் என்ற பாடல் எழுதிய பிறகுதான் எனக்கு நானும் ரௌடிதான் படம் கமிட்டானது.” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்