இந்நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் தன்னுடைய வருங்கால மாமனாரும் நயன்தாராவின் தந்தையுமான குரியனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் கூறியுள்ளார். அதில் ஹேப்பி பர்த்டே அச்சன்…நீங்கள் சிரிப்பது, சாப்பிடுவது.. எங்களை பார்ப்பது எல்லாம் மகிழ்ச்சியான விஷயங்கள். உங்களின் இருப்பு எங்கள் வாழ்க்கையை அழகாக மாற்றுகிறது. கடவுள் உங்களுக்கு பலமும் ஆற்றலும் கொடுத்து எங்களோடு காலாகாலத்துக்கும் இருக்க வைக்க வேண்டும். லவ் யூ அச்சு… நீங்கள்தான் எங்கள் ஆசி என உருக்கமாகக் கூறியுள்ளார்.