இதுல கண்டெண்ட்டே இல்ல… நயன்தாரா திருமண வீடியோவை வெளியிட நெட்பிளிக்ஸ் தயக்கம்!

செவ்வாய், 3 அக்டோபர் 2023 (07:30 IST)
இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திருமணம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 9 ஆம் தேதி நடைபெற்றது. மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நடைபெற்ற இந்த திருமணத்திற்கு நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டனர். இந்த திருமணத்துக்குப் பத்திரிக்கையாளர்கள் அழைக்கப்படவில்லை. அதுபோல கலந்துகொண்ட பிரபலங்களுக்கும் செல்போன் அனுமதி வழங்கப்படவில்லை.

இதனால் நயன்தாரா திருமண வீடியோ முன்னணி ஓடிடியான நெட்பிளிக்ஸில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக நெட்பிளிக்ஸ் தளம் ஒன்று 25 கோடி ரூபாய் வரை நயன்தாரா தம்பதிகளுக்கு கொடுத்ததாக தகவல்கள் பரவின. ஆனால் அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் திருமணம் முடிந்து ஒரு ஆண்டுக்கு மேலாகிவிட்ட நிலையில் இதுவரை வெளியீட்டுக்கான அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி அந்த திருமண வீடியோவில் போதுமான அளவு கண்டெண்ட் இல்லை என்பதால் அதை வெளியிட வேண்டாம் என நெட்பிளிக்ஸ் முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்