வெற்றிமாறன் & சூரி படத்தின் தலைப்பு இதுதானா? வெளியானது சீக்ரெட்!

Webdunia
வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (16:51 IST)
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் படத்தின் தலைப்பு அஜ்னபி என இருக்க வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி ஒரு படத்தில் நடிப்பதாக அறிவிப்புகள் சில மாதங்களுக்கு முன்னதாக வெளியானது. அந்த படம் மீரான் மைதீன் என்ற எழுத்தாளர் எழுதிய அஜ்னபி என்ற நாவலை மையமாக வைத்து உருவாக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஏற்கனவே வாடிவாசல் நாவலை மையமாக வைத்து சூர்யாவை கதாநாயகனாக்கி அதே பெயரில் வெற்றிமாறன் படம் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் இந்த படத்துக்கும் நாவலின் பெயரான அஜ்னபியே சூட்டப்படும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்