சிம்புவின் படத்தோடு மோதும் வெற்றிமாறனின் விடுதலை… விறுவிறுப்பாக நடக்கும் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள்!

வெள்ளி, 13 ஜனவரி 2023 (09:01 IST)
வெற்றிமாறன் இயக்கி வரும் விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக நடந்து வருகிறது.

கடந்த ஆண்டே தொடங்கப்பட்ட விடுதலை இந்த படத்தை முதலில் சிறு பட்ஜெட்டில் குறுகிய காலத்தில் எடுத்து முடிப்பதாகவே திட்டமிடப்பட்டது. ஆனால் படத்தில் விஜய் சேதுபதி இணைந்ததும் படத்தின் பட்ஜெட் அதிகமாகி ஏராளமான நட்சத்திரங்களை நடிக்க வைத்தனர்.

இதையடுத்து படம் இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஷூட்டிங் மொத்தமாக முடிந்த நிலையில் முதல் பாகம் மார்ச் 31 ஆம் தேதி தொடங்கும் என தெரிகிறது. அதற்காக இப்போது விறுவிறுப்பாக போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. மார்ச் 30 ஆம் தேதி பத்து தல திரைப்படமும் ரிலிஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்