எண்ணெய் விலை கட்டுப்படுத்த சூரியகாந்தி சாகுபடி அதிகரிப்பு!

சனி, 19 மார்ச் 2022 (10:42 IST)
எண்ணெய் வித்துப் பயிர்களில் குறுகிய காலத்தில் வறட்சியைத் தாங்கி நல்ல மகசூல் தரக்கூடிய பயிர்களில் முக்கியமானது சூரியகாந்தி. இருதய நோய்க்கு சிறந்த மருந்தாக பயன்படுத்தப்படும் இதை சமையல் எண்ணெய்க்கு பயன்படுத்தப்படுகிறது
 
இந்நிலையில் சமையல் எண்ணெய்யின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதை அடுத்து சமையல் எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்த சூரியகாந்தி சாகுபடி பரப்பு அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை விவசாய முறைகளை ஊக்குவிக்கும் திட்டத்துக்கு ரூ.400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 
 
மேலும், மரம் வளர்ப்புத் திட்டத்தின் கீழ் இலவச தென்னங்கன்று வழங்க ரூ.300 கோடி ஒதுக்கட்டுள்ளது. அத்துடன் வேளாண் பொருள்களின் விதை முதல் விற்பனை வரை அறிந்துகொள்ள புதிய செயலி அறிமுகப்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்