விஜய் சேதுபதியால் நிற்கும் விடுதலை ஷூட்டிங்!

சனி, 19 மார்ச் 2022 (16:02 IST)
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடிக்கும் விடுதலை படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

தனுஷுடனான அசுரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வரும் திரைப்படம் “விடுதலை”. இந்த படத்தின் மூலமாக காமெடி நடிகர் சூரி முதன்முறையாக கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். மற்றுமொரு கதாபாத்திரத்தில் இயக்குனரும் நடிகருமான கௌதம் மேனன் நடிக்கிறார். மேலும் மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில் கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடிக்கின்றனர்.

கடந்த ஆண்டே தொடங்கப்பட்ட இந்த படத்தை முதலில் சிறு பட்ஜெட்டில் குறுகிய காலத்தில் எடுத்து முடிப்பதாகவே திட்டமிடப்பட்டது. ஆனால் படத்தில் விஜய் சேதுபதி இணைந்ததும் படத்தின் பட்ஜெட் அதிகமாகி ஏராளமான நட்சத்திரங்களை நடிக்க வைத்தனர். ஆனால் அனைவரும் பிஸியான நடிகர்களாக இருப்பதால், அவர்களின் தேதிகளைப் பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனால் இப்போது வரை 60 சதவீதம் படப்பிடிப்பு மட்டுமே முடிந்துள்ளதாம்.

இந்நிலையில் இப்போது விஜய் சேதுபதி பேமிலி மேன் சீரிஸின் இயக்குனர்கள் அடுத்து இயக்கும் இந்தி படத்தின் படப்பிடிப்புக்காக சென்றுவிட்ட நிலையில் இப்போது விடுதலை படப்பிடிப்பு கிடப்பில் போடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்