இந்திய சினிமாவில் பேன் இந்தியா என்ற டர்ண்ட்டை உருவாக்கி பிராந்திய மொழி சினிமாக்களின் எல்லையை விரிவாக்கக் காரணமாக அமைந்த படங்கள் என்றால் அது ராஜமௌலி இயக்கிய பாகுபலிதான். அதன் பின்னர் கே ஜி எஃப், புஷ்பா என அந்த பார்முலாவைப் பின்பற்றி வெற்றிக் கொடி நாட்டின.
பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சதய்ராஜ் மற்றும் நாசர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவான பாகுபலி முதல் பாகம் ரிலிஸாகி 10 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளது. இதையடுத்து அதன் இரண்டு பாகங்களையும் ஒன்றாக்கி ஒரே பாகமாக பாகுபலி தி எபிக் என்ற பெயரில் நேற்ற்ய் ரி ரிலீஸ் செய்தனர். கிட்டத்தட்ட மூன்றரை மணிநேரம் ஓடும் படமாக இந்த வடிவம் தொகுக்கப்பட்டிருந்தது.
இடைவேளை வரை முதல் பாகமாகவும், இடைவேளைக்குப் பின்னர் இரண்டாம் பாகமாகவும் படத்தொகுப்பு செய்யப்பட்ட இந்த படத்தைக் காண ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் உருவானது. இந்நிலையில் நேற்று முதல் நாளில் இந்திய அளவில் 9.25 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது எந்தவொரு ரி ரிலீஸ் படத்துக்கும் கிடைக்காத மிகப்பெரிய முதல் நாள் வசூல் என்று சொல்லப்படுகிறது.