வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் & ஆண்ட்ரியா நடிக்கும் ‘மாஸ்க்’… முதல் லுக் போஸ்டர் ரிலீஸ் அப்டேட்!

Webdunia
செவ்வாய், 25 பிப்ரவரி 2025 (15:15 IST)
சமீபத்தில் கவின் நடிப்பில் வெளியான ஸ்டார் மற்றும் பிளடி பெக்கர் ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன. இந்நிலையில் இப்போது கவின் தன்னுடைய அடுத்த படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு ‘மாஸ்க்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் விகர்ணன் அசோக் இயக்க இந்த படத்தில் கவினுடன் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனமும், ப்ளாக் மெட்ராஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. சமீபத்தில் இந்த படத்தின் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளீல் நடந்தது. விறுவிறுப்பாக நடந்த ஷூட்டிங் தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது.

இந்நிலையில் நாளை காலை 10.30 மணிக்கு இந்த படத்தின் அறிமுக போஸ்டர் ரிலீஸாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Andrea Jeremiah (@therealandreajeremiah)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்