பிரபல பாலிவுட் நடிகருக்கு மூச்சுத்திணறல்: மும்பை மருத்துவமனையில் அனுமதி!

வியாழன், 30 ஏப்ரல் 2020 (07:37 IST)
பிரபல பாலிவுட் நடிகருக்கு மூச்சுத்திணறல்
பழம்பெரும் பாலிவுட் நடிகர் ரிஷிகபூர் மூச்சுத்திணறல் காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும், அவரது உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருவதாகவும் தகவல்கள் வந்துள்ளன.  
 
ஏற்கனவே ரிஷிகபூர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதன்பின் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று குணமாகியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ரிஷிகபூரின் உடல்நிலை சற்று தேறியுள்ளதாகவும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகவும் ரிஷிகபூரின் சகோதரர் ரிந்திர் கபூர் தெரிவித்துள்ளார்.
 
பிரபல பாலிவுட் நடிகருக்கு மூச்சுத்திணறல்
ஏற்கனவே இர்பான்கான் மரணத்தினால் துயரத்தில் மூழ்கியிருக்கும் பாலிவுட் திரையுலகம் தற்போது ரிஷிகபூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்ததும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது. ஷாருக்கான், அமீர்கான், சல்மான்கான் உள்பட பல பாலிவுட் பிரபலங்கள், ரிஷிகபூர் விரைவில் குணமாக வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதாக தங்களது சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்