90 களின் தமிழ் சினிமாவின் மிரட்டல் வில்லன் நடிகர் கசான் கான் காலமானார்!
செவ்வாய், 13 ஜூன் 2023 (07:14 IST)
தமிழ் மற்றும் மலையாள சினிமாக்களில் 90 களில் பல படங்களில் வில்லனாக நடித்து மிரட்டியவர் கசான் கான். இவர் நடிப்பில் வெளியான சேதுபதி ஐபிஎஸ், வல்லரசு, உள்ளத்தை அள்ளித்தா மற்றும் முறைமாமன் உள்ளிட்ட ஏராளமான படங்கள் அவருக்கு தனித்த அடையாளத்தை ஏற்படுத்தின.
சேதுபதி ஐபிஎஸ் படத்தில் மொட்டையடித்துக் கொண்டு சாத்து நட சாத்து பாடல் இப்போது வரை பலரும் விரும்பி பார்க்கும் பாடல். கேரளாவைப் பூர்விகமாகக் கொண்டிருந்தாலும் அவர் அதிகமாக நடித்தது தமிழ் சினிமாக்களில்தான். ஆனால் 2000களுக்குப் பிறகு அவருக்கு பெரியளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
கடைசியாக 2015 ஆம் ஆண்டு லைலா ஓ லைலா என்ற மலையாளப் படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் மாரடைப்புக் காரணமாக அவர் இறந்துள்ளார். இந்த தகவலை மலையாள சினிமா தயாரிப்பாளர் எம் என் பாதுஷா என்பவர் உறுதிப்படுத்தியுள்ளார்.