வேணு அரவிந்த் சுயநினைவுடன்தான் இருக்கிறார்… சக நடிகர் வீடியோ!

Webdunia
வெள்ளி, 30 ஜூலை 2021 (10:13 IST)
சீரியல் நடிகர் வேணு அரவிந்த் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் செய்திகள் வெளியாகின.

தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் கடந்த 30 வருடங்களாக நடித்து வருபவர் வேணு அரவிந்த்.  இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் குணமாகிய பின்னர் மூளையில் கட்டி இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அறுவை சிகிச்சை செய்து மூளைக்கட்டி அகற்றப்பட்ட பின்னர் அவர் கோமா நிலைக்கு சென்றார். இந்நிலையில் இப்போது வரை அவர் கவலைக்கிடமான நிலையிலேயே இருப்பதாக சொல்லப்பட்டது.

ஆனால் இதை வேணு அரவிந்தின் சக நடிகரான அருண் ராஜன் ‘வேணு அரவிந்த் கோமாவில் இல்லை. அவர் சுயநினைவில்தான் இருக்கிறார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டுத் தெரிந்துகொண்டு வருகிறார். விரைவில் முழு குணமாகி வீடு திரும்புவார்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்