சொந்த ஊருக்கு விசிட் அடித்த வெங்கட் பிரபு

வியாழன், 30 டிசம்பர் 2021 (17:12 IST)
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர், வாகை சந்திரசேகர், பிரேம்ஜி, கருணாகரன், டேனி, அஞ்சனா கீர்த்தி, அரவிந்த் ஆகாஷ் என மிகப்பெரிய நட்சத்திர கூட்டணியில் உருவான இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று  திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த வெற்றிக்குக் காரணமான அனைவருக்கும்  நன்றி சொல்லும் விதமாக இந்த படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சமீபத்தில்  சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் இந்த படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த திரைப்பட விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என அனைவரும் அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.

இப்படத்தை அடுத்து தனது புதுப்படம் குறித்து வெங்கட்பிரப்பு  அறித்தார். இதனால் அவரது அடுத்த படத்திற்கான எதிரொபார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் மா நாடு படத்தின் வெற்றியை அடுத்துக  இயக்குனர் வெங்க்கட்பிரபு  மற்றும் அவரது தம்பி பிரேம்ஜி அம்ரன் ஆகிய இருவரும்  பண்ணைப்புரம் சென்றுள்ளனர்.

இளையராஜா , கங்கை அமரன் சகோதரர்களின் சொந்த ஊர் தேனி மாவட்டம் அருகேயுள்ள பண்ணைபுரம் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Pannaipuram Brother’s

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்