படத்தின் பெயருக்கேற்றவாறு 18+ விஷயங்களை மிக அதிகமாகவே சேர்த்துள்ளாராம் வெங்கட் பிரபு. படத்தின் கதாநாயகனின் வாழ்க்கையில் இருவேறு கால கட்டங்களில் நடக்கும் கதைக்களத்தை வைத்து உருவாக்கியுள்ளாராம். இந்நிலையில் படம் பற்றிக் கூறியுள்ள அவர் 1980 களில் வந்த பாக்யராஜின் சின்னவீடு ஸ்டைலில் இந்த படம் இருக்கும். நானும் என் உதவியாளர் மணிகண்டனும் லாக்டவுன் நாட்களில் இதைப்பற்றி விவாதித்தோம். சுவாரஸ்யமாக இருந்ததால் அவரை இந்த திரைக்கதையை எழுத சொன்னேன் எனக் கூறியுள்ளார். முதல் முதலாக தன்னுடைய உதவியாளர் கதையை வெங்கட்பிரபு படமாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.