இந்நிலையில் வெங்கட்பிரபுவின் படத்துக்கு மன்மத லீலை என்று தலைப்பு வைக்கக்கூடாது என பாலச்சந்தர் ரசிகர் மன்றத்தின் சார்பாக கோரிக்கை வைத்துள்ளனர். இந்த ரசிகர் மன்றத்தின் தலைவராக இருப்பவர் நடிகர் ராஜேஷ் என்று சொல்லப்படுகிறது. ஆனால் வெங்கட்பிரபு தரப்போ முறைப்படி பாலச்சந்தரின் வாரிசுகளிடம் தலைப்புக்கான் உரிமையை வாங்கிவிட்டதாக தெரிவிக்கின்றனர்.
இது ஒருபுறம் இருக்க இந்த படத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் பெயருக்கேற்றவாறு 18+ விஷயங்களை மிக அதிகமாகவே சேர்த்துள்ளாராம் வெங்கட் பிரபு. படத்தின் கதாநாயகனின் வாழ்க்கையில் இருவேறு கால கட்டங்களில் நடக்கும் கதைக்களத்தை வைத்து உருவாக்கியுள்ளாராம். இந்த படத்தை முதலில் ஓடிடியில் வெளியிடலாம் என முடிவுசெய்துதான் உருவாக்கினார் வெங்கட்பிரபு. ஆனால் மாநாடு படத்தின் வெற்றியால் இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளதால் திரையரங்க வெளியீடு என முடிவு செய்துள்ளனராம். வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.