ஜஸ்ட் மிஸ்ஸான ரஜினி பட வாய்ப்பு… வெங்கட் பிரபு பகிர்ந்த ரகசியம்!

செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (15:45 IST)
இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

மாநாடு படம் அதன் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் லாபம் கொடுத்துள்ளது. இதுபோல சிம்புவின் படம் ஒன்று அனைத்துத் தரப்பினருக்கும் லாபம் கொடுத்து ஒரு மாமாங்கம் ஆகிறது. அதே போல இந்த படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கும் லாபமாக அடுத்த படங்களில் சம்பளம் கணிசமாக ஏறியுள்ளது. திரையரங்கு வருவாய் மூலமாக மட்டுமே சுமார் 100 கோடி ரூபாய் வருவாய் ஈட்டிய முதல் சிம்பு படமாக அமைந்துள்ளது.

இந்த படத்தைப் பார்த்து வியந்த நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் வெங்கட்பிரபுவை அழைத்துப் பாராட்டினார். அப்போது இயக்குனர் வெங்கட்பிரபு ரஜினிக்கு ஒரு கதைக் கூறியுள்ளார். ஆனால் ரஜினியோ கதை கொஞ்சம் சர்ச்சையான தளத்தில் இருப்பதாகக் கூறினாராம். ஆனால் ரஜினி தன்னை அழைத்து கதையை ஓகே சொல்லிவிடுவார் என நினைத்திருந்த வேளையில்தான் ரஜினி நெல்சன் படம் பற்றிய அறிவிப்பு வந்தது என வெங்கட்பிரபு சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்