அட இவங்க மன்மத லீலை செம்மயா இருக்கே… மாறி மாறி கலாய்த்துக்கொள்ளும் சகோதரர்கள்!

Webdunia
சனி, 2 ஏப்ரல் 2022 (10:25 IST)
மன்மத லீலை படம் நேற்று மதியக் காட்சியில் இருந்து திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இயக்குனர் வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது மாநாடு. இதனால் வெங்கட்பிரபு இப்போது இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் இயக்குனராக மாறியுள்ளார். இதையடுத்து மாநாடு படத்தின் தாமதத்தால் ஏற்கனவே அசோக் செல்வனை வைத்து அவர் மன்மத லீலை என்ற படத்தை இயக்கி முடித்துவிட்டார். இந்த படம் ஏப்ரல் 1 ஆம் தேதி நேற்று வெளியானது.

இதையடுத்து படத்தின் இசையமைப்பாளரான பிரேம்ஜி அமரன் தனது அண்ணன் வெங்கட்பிரபுவைக் கலாய்க்கும் விதமாக அவரின் பழையப் புகைப்பத்தை மன்மத லீலை என்று மாற்றி எழுதி பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படம் வைரலானதை அடுத்து தற்போது வெங்கட்பிரபு பிரேம்ஜியின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த இரு புகைப்படங்களும் டிவிட்டரில் கவனத்தைப் பெற்றுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்