15 நிமிஷத்துல முடிச்சிடணும். இயக்குனருக்கு வெங்கட்பிரபு கட்டளை

Webdunia
வியாழன், 8 ஜூன் 2017 (22:12 IST)
இயக்குனர் வெங்கட்பிரபு தனது பிளாக் டிக்கெட் கம்பெனி நிறுவனத்தின் மூலம் 'ஆர்.கே.நகர்' என்ற படத்தை தயாரிக்கவுள்ளார் என்ற செய்தி வெளியானதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் மூலம் தனது நீண்ட நாள் கனவு ஒன்றையும் அவர் தற்போது நிறைவேற்றிவிட்டார்



 


வெங்கட்பிரபுவுக்கு படம் தயாரிக்க வேண்டும் என்பதைவிட குறும்படங்கள் தயாரிகக் வேண்டும் என்பது நீண்டநாள் கனவாம். அதன்படி தற்போது குறும்படம் ஒன்றை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ள வெங்கட்பிரபு அதுகுறித்த முழு விபரங்களை டுவிட்டரில் தெரிவித்துள்ளார்

இதன்படி இந்த குறும்படத்தை  ஆர்.டி.குமார் இயக்கவுள்ளதாகவும், இதில் முக்கிய கேரக்டரில் நடிகர் சம்பத் நடிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார். யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த குறும்படத்திற்கு  ஷ்ரேயன் ஒளிப்பதிவாளரகவும், ப்ரவீண் கே.எல். படத்தொகுப்பாளராகவும், ஜெயஸ்ரீ கலை இயக்குனராகவும் பணிபுரியவுள்ளனர்.

இயக்குனரிடம் வெங்கட்பிரபு வைத்துள்ளது ஒரே ஒரு கண்டிஷன் தானாம். இந்த குறும்படம் 15 நிமிடங்கள் மட்டுமே ஓடும் வகையில் இருக்க வேண்டும் என்பதுதான் அந்த கண்டிஷன்
அடுத்த கட்டுரையில்