தேசிய பங்குச்சந்தையில் நுழைந்த வேல்ஸ் பிலிம்ஸ்.. முதல் நாளே 7 ரூபாய் உயர்வு..!

Webdunia
புதன், 22 மார்ச் 2023 (19:56 IST)
தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் முதல் முதலாக பங்கு சந்தையில் நுழைந்துள்ளதை அடுத்து முதல் நாளை அந்த நிறுவனத்தின் பங்குகள் ஏழு ரூபாய் உயர்ந்துள்ளது. பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல். இந்நிறுவனம் இன்று முதல் பங்குச்சந்தையில் பட்டியல் இடப்பட்டு உள்ளது. 
 
இதனை அடுத்து குறித்து பேசியபோது ஐசரி கணேஷ், ‘பங்குச்சந்தையில் எங்கள் நிறுவனம் பட்டியலிட வேண்டும் என மூன்று ஆண்டுகளாக முயற்சித்து வருவதாகவும் இன்று தான் தனது கனவு நலமாக உள்ளதாகவும் தெரிவித்தார். 
 
இன்று பட்டியல் இடப்பட்ட வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பங்கு 99 ரூபாய் என ஆரம்பிக்கப்பட்ட நிலையில் வர்த்தகம் முடியும்போது 106 ரூபாய் முடிந்து 7 ரூபாய் லாபம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வரும் நாட்களிலும் இந்நிறுவனம் பங்குச்சந்தையில் பெரும் லாபத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்