மிஷ்கின் விஜய் சேதுபதி இணையும் படம் தொடங்குவது எப்போது?

வெள்ளி, 18 நவம்பர் 2022 (16:22 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மிஷ்கின் இப்போது பிசாசு 2 படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் ஆண்ட்ரியா, பூஜா உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர். முக்கியமான ஒரு வேடத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். அவரின் காட்சிகள் 20 நிமிடங்கள் இடம்பெறும் என சொல்லப்படுகிறது.

இதையடுத்து இந்த படத்தின் போது விஜய் சேதுபதி மற்றும் மிஷ்கின் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட நட்பின் காரணமாக இப்போது இருவரும் சேர்ந்து ஒரு படத்தை உருவாக்க உள்ளனர். இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார்.

இந்த படம் வரும் ஜனவரி மாதம் முதல் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தில் பங்குபெறும் கலைஞர்கள் பற்றிய விவரம் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்