விஜய்யின் வாரிசு: டிஜிட்டல் , சாட்டிலைட் உரிமை பெற்ற நிறுவனங்கள்!

வெள்ளி, 29 ஜூலை 2022 (19:23 IST)
தளபதி விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமை வியாபாரம் சம்பந்தப்பட்ட வியாபாரம் நடந்து வருவதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது
 
அதேபோல் இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி பெற்றிருப்பதாகவும் சன்டிவி இதற்காக ஒரு மிகப்பெரிய தொகையை வாரிசு தயாரிப்பாளருக்கு கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது 
 
விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் தில்ராஜூ தயாரிப்பில் தமன் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவதற்கு முன்பே பல கோடிகளை சம்பாதித்து கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்