விஜய் தேவரகொண்டா & மைக் டைசன் நடிக்கும் ‘லைகர்’… தமிழக ரிலீஸ் உரிமையைக் கைப்பற்றிய நடிகர்!

வியாழன், 28 ஜூலை 2022 (11:01 IST)
நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் பேன் இந்தியா ரிலீஸாக ‘லைகர்’ திரைப்படம் உருவாகி வருகிறது.

விஜய் தேவரகொண்டா- இயக்குனர் பூரி ஜெகன்னாத் – தயாரிப்பாளர் கரண் ஜோஹர் ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள லைகர் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியாக உள்ளது. இந்த படத்தில் அமெரிக்க குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது இந்த படத்தின் மீது கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.

சமீபத்தில் மைக் டைசனின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு லைகர் படக்குழுவினர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஸ்பெஷல் வீடியோ ஒன்றினை வெளியிட்டனர். அதுபோல படத்தின் டிரைலரும் வெளியாகி கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில் தமிழகத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்யும் உரிமையை ஸ்டுடியோ 9 நிறுவனம் சார்பாக நடிகர் ஆர் கே சுரேஷ் பெற்றுள்ளார். சமீபத்தில் இவர் மாமனிதன் திரைப்படத்தை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்