''வாரிசு'' படம் 7 நாட்களில் ரூ.210 கோடி வசூல்- தில்ராஜூ தகவல்

புதன், 18 ஜனவரி 2023 (14:58 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில் சமீபத்தில்  வெளியான  படம் வாரிசு.

இப்படத்தில் இவருடன் இணைந்து ராஷ்மிகா, குஷ்பு,  பிரகாஷ்ராஜ், சரத்குமார் உள்ளிட்ட  நடிகர்கள் நடித்திருந்தார். இப்படத்தை வம்சி இயக்கியுள்ளார். தில்ராஜு தயாரித்துள்ளார். எஸ் தமன் இசையமைத்துள்ளார்.

குடும்பத்தின் முக்கியத்துவம், பாசம் ஆகியவற்றின் அடிப்படையில் உருவான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  வெளி நாடுகளிலும்  வசூலில் சாதனை படைத்து வருகிறது.

துணிவு படத்திற்குப் போட்டியாக இப்படம் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி ரிலீஸான நிலையில், இப்படம் வெளியான 7  நாட்களில் உலகம் முழுவதும் ரூ.210  கோடி வசூல் குவித்துள்ளது.

இதை வாரிசு பட தயாரிப்பாளர் தில்ராஜூ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதனால், விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Triple ah received your love in 7 days nanba

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்