வரலட்சுமியிடம் அந்த மாதிரி எதிர்பார்த்த தயாரிப்பாளர்க்கு அடி உதை

Webdunia
வியாழன், 30 மார்ச் 2017 (17:51 IST)
அப்பா படம் மலையாள ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட நடிகை வரலட்சுமி திடீரென ஆணாதிக்கம் கொண்ட தயாரிப்பாளருடன் வேலை செய்ய முடியாது என காரணம் கூறி விலகினார்.


 

 
இதுகுறித்து கூறிய அந்த தயாரிப்பாளர், வரலட்சுமி கஸாபாவில் குண்டாக இருந்தார். இப்போ உடல் எடையை குறைத்து கதாபாத்திரத்துக்கு செட் ஆகவில்லை. இதனால் வேண்டாமென கூறினேன், என்றார்.
 
தற்போது வரலட்சுமிக்கு பதில் இனியா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கொச்சியில் படப்பிடிப்பு நடைப்பெற்று வருகிறது. அந்த பகுதி ஓட்டல் பாரில் பத்து இளைஞர்கள் குடித்துவிட்டு ரகளை செய்துள்ளனர். அப்போது இந்த தயாரிப்பாளர் அந்த வழியே போன் பேசிக்கொண்டே சென்றுள்ளார். இதைப்பார்த்த அந்த வாலிபர்கள் காவல்துறைக்குதான் போன் செய்கிறார் என எண்ணி அவரை தாக்கியுள்ளனர்.
 
இதில் படுகாயமடைந்த தயாரிப்பாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நடந்த அன்று இரவு வரலட்சுமி விருது வழங்கும் விழாவில் இருந்தார்.
அடுத்த கட்டுரையில்