‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் பகுதி’ படத்தில், குற்றத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடிக்கிறாராம் வரலட்சுமி.
மணிரத்னம் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் சர்ஜுன். இவர் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘எச்சரிக்கை இது மனிதர்கள் வாழும் இடம்’. இரண்டு தனி மனிதர்கள் வாழ்வில் ஒரு குற்றம் குறுக்கிடுவதும், அதை போலீஸ் அதிகாரி துப்பறிந்து கண்டுபிடிப்பதும்தான் படத்தின் கதை.
துப்பறியும் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியாக சத்யராஜ் நடித்துள்ளார். நிஜத்திலேயே நன்றாக நடனமாடத் தெரிந்த வரலட்சுமி, இந்தப் படத்தில் டான்ஸராகவே நடித்துள்ளார். ‘போடா போடி’, ‘தாரை தப்பட்டை’ படங்களிலும் அவர் டான்ஸராக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. கதைப்படி, செய்யாத குற்றத்திற்காக பாதிக்கப்படும் பெண்ணாக வரலட்சுமி நடித்துள்ளார்.