''வெண்ணிலா கபடிக்குழு'' பட நடிகர் 'மாயி' சுந்தர் காலமானார்!
சனி, 24 டிசம்பர் 2022 (14:54 IST)
வெண்ணிலா கபடிக் குழு என்ற படத்தில் நடித்த பிரபல நடிகர் மாயி சுந்தர் இன்று காலமானார்.
தமிழ் சினிமாவின் பிரபல குணச்சித்திர நடிகராக வலம் வந்தவர் மாயி சுந்தர். இவர், வெண்ணிலா கபடிக்குழு, மாயி உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக மஞ்சல் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்த மாயி சுந்தர் மன்னார்குடியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.