ஒரு வழியாக முடிந்த வலிமை படப்பிடிப்பு… கொண்டாடி மகிழ்ந்த ரசிகர்கள்!

வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (10:26 IST)
நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் படப்பிடிப்பு மொத்தமும் முடிந்துள்ளது.

தல அஜித் நடித்துவரும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் இறுதிகட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற உள்ளது. இதற்காக அஜித் உள்ளிட்டவர்கள் ரஷ்யாவுக்கு கிளம்பி சென்றனர். அங்கு சில நாட்கள் நடந்த படப்பிடிப்பில் அஜித் சம்மந்தபட்ட பைக் சேஸ் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இதோடு வலிமை படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக நடந்த வலிமை படப்பிடிப்பு முடிந்துள்ளதை அடுத்து அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்